இந்த காலத்து, அரசியல் என்றாலே, நாம் முட்டாலாக்கபடுகிறோம் என்று பொருளாகிவிட்டது. அதனால், ஆம் ஆத்மி கட்சி சார்பாக பல விழிப்புணர்வு பதிவுகளை தந்துகொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக,

2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எம் எல் ஏக்கள் செய்த செலவுகள் விபரங்களை தேர்தல் துறைக்கு சமர்பித்துள்ளார்கள். அதன் விபரம்.

வெற்றி பெற்ற 30 எம் எல் ஏ க்களின் மொத்த சராசரி செலவு 7.30 லட்சம்.  அதாவது  புதுச்சேரியில்  30 தொகுதிகளிலும் அனைத்து எம் எல் ஏக்களும் சேர்ந்து செய்த மொத்த செலவு ரூ 2 கோடி 19 லட்சம்.

  • 2 காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் சராசரி செலவு ரூ 9.52 லட்சம்.
  • 6 பாரதிய ஜனதா  சட்ட மன்ற உறுப்பினர்கள் சராசரி செலவு ரூ 9.16 லட்சம்.
  • 10 என் ஆர் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் சராசரி செலவு ரூ 6.20 லட்சம்.
  • 6 தி மு க சட்ட மன்ற உறுப்பினர்கள் சராசரி செலவு ரூ 7.08 லட்சம்.
  • 6 சுயேச்சைகள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சராசரி செலவு 6.76 லட்சம்.

இந்த தேர்தலில் அதிக  செலவு செய்தவர்கள்.

  • என் ஆர் காங்கிரஸ் திருமுருகன் ரூ 15,47,783
  • பா ஜ க வில் திரு கல்யாண சுந்தரம் ரூ 14,49,834
  • சுயேச்சை ஏனாம் எம் எல் ஏ ரூ 13,80,615

இந்த தேர்தலில் குறைந்த  செலவு செய்தவர்கள்.

  • திமுக அனிபால் கென்னடி ரூ 3,08,984.
  • சுயேச்சை உழவர்கரை எம் எல் ஏ. திரு சிவசங்கர் ரூ 2,67,632.
  • முத்தியால்பேட்டை சுயேச்சை எம் எல் பிரகாஷ் குமார் ரூ 2,46,716.

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், தாங்கள் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டியுள்ளனர். தேர்தல் ஆணையமும். அப்படியே ஏற்றுக் கொண்டது.

தேர்தலில் ஓட்டுக்கு ரூ 700 ல் தொடங்கி,  ரூ 3000.வரை வழங்கப்பட்டது,

  • தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதாம்?
  • பறக்கும் படைக்கு தெரியாதாம்?
  • தடுக்கும் காவல் துறைக்கு தெரியாதாம்?
  • ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற வேட்பாளருக்கே தெரியாதாம்?
  • ஓட்டுப் போட பணம் வாங்கிய மக்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. AAP. ஹமீது. MMY.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »